Wednesday, October 3, 2018

தென்திசை | நூல் விமர்சனம் | பாலகுமார் விஜயராமன் | அரசியல் பகடையாட்டம்

ஷான் எழுதிய “வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம் - பாலகுமார் விஜயராமன்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.



இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. 



வெட்டாட்டம் | கதை | நாவல் | உலகம் | படைப்பு | அரசியல் | யதார்த்தம் | எழுத்து | தமிழ் | வலைத்தளம் | நூல் மதிப்பீடு | வாசிப்பு | சிகரம் 

No comments:

Post a Comment

Ads

Popular Posts