“கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது. கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.
“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது” எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது.
நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது.
அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது.
இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது.
கடவுள் | உலகம் | மக்கள் | வணிகமயமாக்கம் | அரசியல் | இந்து | மதம் | சமயம் | தேர்தல் | வாழ்க்கை | நூல் மதிப்பீடு | தமிழ் | வலைத்தளம் | சிகரம்
No comments:
Post a Comment