பிக்பாஸ் சீஸன் 2-ஐ வெல்லக்கூடியவர்கள் என்று நான் கணித்திருந்த போட்டியாளர்களில் முதன்மையானவரான டேனி இன்று வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.தொடக்கத்தில் இவரை அப்படிக் கணிப்பதற்கான எவ்வித அடையாளமும் தென்படவில்லை. ஒரு சாதாரண குறும்புத்தனமான இளைஞராகத்தான் அறிமுகமானார். தலைமுறை இடைவெளி காரணமாக நடுத்தர வயது மற்றும் இளம் வயது என்கிற கூட்டணி தன்னிச்சையாக அங்கு உருவானது.
மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என்ற இளைஞர் கூட்டணியுடன் டேனி இணைந்தது தன்னிச்சையானது. ஆனால் அந்தக் குழுவின் லீடர் என்கிற மாதிரியான தவறான அபிப்ராயத்தைப் பொன்னம்பலமும் பாலாஜியும் தொடர்ந்து பேசுவதின் மூலம் உருவாக்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டணியின் மூளை என்று யாஷிகாவை ஒருவகையில் சொல்ல முடியும்.
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #கமல்ஹாசன் #ரித்விகா #ஜனனி #மும்தாஜ் #டேனியல் #பாலாஜி #சென்றாயன் #மஹத் #சிம்பு #யாஷிகா #சிகரம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.