Wednesday, January 15, 2020

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்

நண்பர் பரிவை சே. குமார் – மண்மணம் வீசும் இனிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். பல தளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்துப் பணி கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டது என்றாலும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு அறிமுகம். 

நான் தொடர்ந்து, ரசித்து வாசிக்கும் கதைகளில் அவருடைய கதைகளும் உண்டு. சில கதைகள் படித்து நீண்ட நாட்களுக்குப் பின்னரும் மனதில் நினைவில் நிற்கும். 



வலைவழி உறவென்றாலும் நேரில் சந்தித்தது போன்று தொடர்ந்து நினைவில் நிற்பவர் குமார். ஒரு சில சமயங்களில் அவருடன் வாட்ஸப் வழியும் மின்னஞ்சல் வழியும் தொடர்பு கொண்டதுண்டு. 

இத்தனை வருடங்களில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் இன்னும் புத்தகமாகக் கொண்டு வரவில்லையே என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. 

இந்தியாவிலிருந்து பாலை நாட்டில் இருந்து கொண்டு புத்தகம் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால் தான் வெளியிடாமல் இருக்கிறார் என்று எனக்கு நானே பதில் சொல்லிக் கொள்வேன்!


சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம் 
https://sigaram6.blogspot.com/2020/01/edhir-sevai-parivai-se-kumar-venkat-nagaraj.html 

Saturday, October 20, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 04 | வனக் கள்வனும் வனத்தில் தேவதையும்

உடனே வாளுடன் சென்ற கள்வனை அழைத்துப் “புரவித் தேரை சோதனை செய்” என்று கட்டளையிட்டான். நடப்பவை அனைத்தையும் வண்டியில் இருந்த சிறு துவாரம் வழியே பார்த்துக் கொண்டிருந்த பத்திரை என்ன நடக்குமோ என்று அச்சப் பட்டுக் கொண்டிருந்தாள். 




#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Tuesday, October 16, 2018

மின்னற் பொழுதே தூரம் | கட்டுரை | அபிலாஷ் சந்திரன் | ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)

என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான் திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம். 



ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது. 


#வைரமுத்து #சின்மயி #பாலியல் #குற்றம் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #அறிவு #உறவு #காதல் #புரிதல் #மனம் #உரையாடல் #சிகரம் 

Friday, October 5, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 03 | கள்வர்களின் தலைவன்

கள்வர்கள் இவர்களைத் தாக்க ஆரம்பித்ததும் வானவல்லி மீண்டும் பத்திரையிடம், “எது நடந்தாலும் நான் அழைக்கும் வரை வண்டியிலிருந்து இறங்கவோ, எந்தவித சத்தமோ இடக்கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டுக் கள்வர்கள் யாரும் கவனிக்குமுன் வண்டியின் திரைச் சீலையை முற்றிலும் மூடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள் வானவல்லி. 




#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Wednesday, October 3, 2018

தென்திசை | நூல் விமர்சனம் | பாலகுமார் விஜயராமன் | அரசியல் பகடையாட்டம்

ஷான் எழுதிய “வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம் - பாலகுமார் விஜயராமன்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.



இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. 



வெட்டாட்டம் | கதை | நாவல் | உலகம் | படைப்பு | அரசியல் | யதார்த்தம் | எழுத்து | தமிழ் | வலைத்தளம் | நூல் மதிப்பீடு | வாசிப்பு | சிகரம் 

அகத்தீ | நூல் விமர்சனம் | சு.பொ.அகத்தியலிங்கம் | அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்

“கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது. கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.

“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது” எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது.



நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது.

அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது. 

இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது.


கடவுள் | உலகம் | மக்கள் | வணிகமயமாக்கம் | அரசியல் | இந்து | மதம் | சமயம் | தேர்தல் | வாழ்க்கை | நூல் மதிப்பீடு | தமிழ் | வலைத்தளம் | சிகரம் 

Sunday, September 16, 2018

அசை | சிவதாசன் | கட்டுரை | திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார். 




#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #ஆங்கிலேயர் #தமிழர் #சமஸ்கிருதம் #பைபிள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Ads

Popular Posts