Friday, August 31, 2018

கணியம் | தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் | அத்தியாயம் 20 | தமிழின் தனித்தன்மைகளை வைத்துக் குறியிட்ட உரைகள் தேவையைக் குறைக்க முடியுமா?

இயந்திரக் கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்துக்குப் பல சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கற்றல் நுட்பங்களுடன், விதிகள் சார்ந்த அணுகுமுறைகளைக் கலந்தும் சில கருவிகள் உள்ளன. எனினும், பெரும்பாலானவை உருபனியல் அல்லது சொற்பகுப்பியல் உத்திகளில் கவனம் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் மிகுதியான குறியீடு செய்த உரைத் தரவுகளையே நம்பியிருக்கிறார்கள். இந்த சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகளின் துல்லியம் 93 முதல் 98% வரை உள்ளது. 



ஆங்கிலத்துக்கு இது பொருத்தமான அணுகலாக இருக்கலாம். ஆனால் இந்திய மொழிகளில் வளங்கள் குறைவாக இருப்பதால் இது உகந்த வழியல்ல. மேலும் பொதுவாக இந்திய மொழிகளை உருவமைப்புப்படி வளமான மொழிகள் என்று சொல்லலாம். இது சில புதிய சிக்கல்களை உண்டாக்குகிறது. இது தவிர, இந்திய மொழிகளுக்கு வாக்கியத்தில் சொல்வரிசை ஒப்பீட்டளவில் கறாரான விதிமுறைப்படி அமைவதில்லை. 


#கணினி #தமிழ் #தொழிநுட்பம் #குறியீடு #நுட்பம் #அகராதி #கற்றல் #அறிவு #உலகம் #SRRs #RDR #இணையம் 

No comments:

Post a Comment

Ads

Popular Posts